ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

* மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கடவுளை வணங்கினால், மனித மனங்களில் ஒற்றுமை உண்டாகும். இதற்காகவே நம் முன்னோர் கோயிலைக் கட்டி வைத்தனர்.
* ஊர் ஒற்றுமை கோயிலால் நிறைவேறுவது போல, வீட்டு ஒற்றுமை நிலைக்கவே வீட்டிலும் வழிபாட்டை நடத்துகிறோம்.
* மிருகநிலையில் இருக்கும் மனிதனை தெய்வ நிலைக்கு கொண்டு சேர்க்கும் பள்ளிக்கூடங்களே கோயில்கள்.
* பலவீனமான உயிர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை இந்த உலகில் கலியுகம் இருக்கும். அநியாயம் அழிந்தால் கலியும் காணாமல் போகும்.
* மற்றவர்களைப் போல அநியாயம் செய்தால் தவறில்லை என்று எண்ணி நாமும் அநியாயத்தின் வழியில் செல்லக்கூடாது.
* தர்மவழியில் நடப்பவனுக்கு நன்மைக்கான பலன் கைமேல் கிடைக்கும். இதில் சந்தேகம் வேண்டாம்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள்புரியும்.
- பாரதியார்