ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் பாவம் செய்வதை நிறுத்தினால், தெய்வத்தன்மை பெற்று வாழலாம்.
* ஒருவருக்கொருவர் பயம் கொள்ளத் தேவையில்லை. இந்த விரதத்தைக் கடைபிடிப்பதே உலகில் வாழும் வழி.
* இன்றைய நாகரிகவாழ்வு மனிதனுக்கு மனிதன் விரோதம் கொள்ள வேண்டும் என்ற மூடத்தனத்தில் தள்ளி விட்டது. இதை மாற்றி அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
* உலகில் சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்க்க வேண்டும்.
* பலர் வயிறு வாடவும், சிலர் ஜீரண சக்தியில்லாமல் போகவும் காக்கையிலும் கடைப்பட்ட நிலையில் மனித வாழ்வை வீணாக்குவது கூடாது.
* மனிதர்கள் அத்தனைபேருக்கும் போதுமான உணவை பூமிதேவி கொடுப்பாள். பூமிதேவியின் பயனை கையாளத் தெரியாமல் அறியாமை, பொறாமையால் சிக்கித் தவிக்கிறோம்.
- பாரதியார்