ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பக்தி வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தெய்வத்தை மட்டும் நம்பி விட்டு, நாம் முயற்சி ஏதும் செய்யாமல் இருப்பதும் கூடாது.
* குழந்தை அழாமல் இருந்தால், தாய் வேலைகளில் ஈடுபடுவாள். ஆனால், அழத் தொடங்கினால், அதை சமாதானப்படுத்த முயற்சிப்பாள். தெய்வமும் அதுபோலத் தான்.
* ஊக்கத்துடன் ஒரு செயலைச் செய்ய முயற்சியுங்கள். அந்தப் பணி நிறைவேற எப்படியாவது ஒரு நல்ல முடிவைத் தெய்வமே காட்டிவிடும்.
* முயற்சி திருவினை ஆக்கும் என்பது முன்னோர் திருமொழி. நாம் எல்லோரும் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள்.
* மனதில் தூய எண்ணங்களை நிலைநிறுத்தினால் உடலில் தெய்வத்தன்மை மிளிர்ந்து நிற்கும். அதனால், நாம் எப்போதும் நல்லதையே சிந்திக்க வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்.
- பாரதியார்