
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.
* கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிருங்கள்.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன. ஆனால் எல்லாருக்கும் சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ள முடியாதவன் பிறரைத் திருத்தும் அதிகாரத்தை இழந்து விடுகிறான்.
* ஜீவகாருண்யமே எல்லா தர்மங்களிலும் மேலானது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.
பாரதியார்