
* ஒருவன் தன் மனமறிந்து உண்மையாக வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதைத் தவிர்க்க முடியாது.
* பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்கக்கூடாது.
* நடந்ததை எண்ணி வருந்தக்கூடாது. 'போனது போகட்டும் இனிமேலாயினும் புத்தியாகப் பிழை மனமே' என்பது போல இனியாவது மதிப்புடன் வாழ வழி தேட வேண்டும்.
* ஒற்றுமையுணர்வுடன் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும், நன்மையும் அடைவான்.
* நம் தேசத்தை வெளிநாட்டார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த குற்றம் நம்முடையது தான்.
* இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை பார்த்து கொள்ளலாம் என்று தாமதப்படுத்தினால், அந்த செயல் நடக்காமல் போவதற்கு வாய்ப்புண்டாகும்.
* எந்தச் செயலும் மனதில் தோன்றிய உடனேயே ஆயத்தப்பணிகளில் இறங்கி விட வேண்டும். தள்ளிப்போடுவதால் உற்சாகம் குறையும்.
- பாரதியார்