
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் தனது தனித்தன்மையை செப்பனிட்டு சீரமைக்காமல், வெளி உலகை ஒழுங்குபடுத்தி அழகாக்க முயற்சிக்கிறான். இதனால் யாருக்கும் நன்மை ஏற்படாது.
* பொருளாதார உரிமை மட்டும் ஒருவருக்கு சந்தோஷத்தை தந்துவிடாது. துடிப்பாகவும் நிறைவாகவும் வாழ மனிதன் தனக்குள் ஆரோக்கியமான அக உருவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பதுபோல, எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் மனிதன் நிறைவான நன்மைகளை அடைகிறான்.
* மனதை புத்தி எப்போதும் ஆளவேண்டும். புத்திக்கு மனம் தோழியாக இருக்க வேண்டும். இவற்றின் கூட்டுறவால்தான் மனிதன் நல்வாழ்வு வாழமுடியும்.
- சின்மயானந்தர்