ADDED : ஜன 10, 2016 03:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே இன்பம். போதும் என்ற மனநிலை இல்லாவிட்டால் வாழ்வு துன்பமயமாகி விடும்.
* உடல் தூய்மையை விட மனத்தூய்மையே மிக அவசியம். மனம் எப்போதும் நல்ல எண்ணத்தால் நிரம்பியதாக இருக்க வேண்டும்.
* அருளாளர்கள் வழிகாட்டும் நல்ல விஷயங்களைக் காதால் கேட்டும், மனதால் சிந்தித்தும், வாழ்வில் பின்பற்றியும் நடக்க வேண்டும்.
* பகைவனைப் போல சோம்பலைக் கண்டு அஞ்சி ஒதுக்க வேண்டும். உழைப்பினால் பெறும் செல்வத்திற்கு ஈடு இணை கிடையாது.
-ஜெயேந்திரர்