ADDED : அக் 31, 2013 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளுக்குரிய அருவ நிலையில் சிறப்பிடம் பெறுவது ஒளி வழிபாடு. நம் உள்ளத்தில் ஒளி வடிவில் திகழும் இறைவனையே தீபாவளி நன்னாளில் வழிபாடு செய்கிறோம்.
* தீபாவளித் திருநாளில் தீபம் ஏற்றுவது முக்கியம். திருவிளக்கின் ஐந்து முகங்களும் ஐந்து புலன்களைக் குறிக்கிறது. விளக்கின்
சுடர் வெளிச்சத்தைத் தருவது போல் ஐம்புலன்களும் நல்வழியில் செலுத்தப்பட்டு பயனுடையதாக இருக்க வேண்டும்.
* நம் மனம் பாவங்களிலிருந்து நீங்கி, தெய்வபக்தியில் உறுதியுடன் ஈடுபட வேண்டும் என்பதையே கிருஷ்ணரின் நரகாசுர வதம் நமக்கு உணர்த்துகிறது.
* விலங்கு நிலையில் இருந்து நீங்கி நாம் தெய்வீக இயல்பைப் பெற வேண்டும் என்பதே தீபாவளியின் நோக்கம். இந்த தத்துவத்தை உணர்ந்து வாழத் துவங்கிவிட்டால் ஆன்மிக வலிமையை அடைந்து விடலாம்.
- கமலாத்மானந்தர்