/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கமலாத்மானந்தர்
/
திருத்தல யாத்திரை செல்வோம்
/
திருத்தல யாத்திரை செல்வோம்
ADDED : பிப் 12, 2009 10:51 AM

<P> * திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்வதும் ஆன்மிகப் பயிற்சிகளில் ஒன்று தான். காலம் காலமாக எத்தனையோ அருளாளர்கள் திருத்தலப் பயணங் கள் மேற்கொண்டு, வாழ்வில் மேன்மை அடைந்திருக்கின்றனர். சாதாரண மக்களாகிய நாமும் முடிந்த போதெல்லாம் திருத்தலங்களுக்குச் செல்ல வேண்டும். தல யாத்திரை செல்வது என்பது நமது பாரம்பரிய நடைமுறை. அதை இக்கால சந்ததிக்கும் நாம் பழக்கப்படுத்தி அவர்களையும் யாத்திரை மேற்கொள்ளச் செய்ய வேண்டும். <BR>* எந்த அளவிற்கு ஒருவர் மனத்தூய்மையோடு விளங்குகிறாரோ, அந்த அளவுக்கே அவருக்கு தலயாத்திரை மேற்கொள்வதனால் நல்லபலன் உண்டாகும். மனத்தூய்மை இல்லாதவர்கள் தலயாத்திரை மேற் கொள்வதால் பலன்களைப் பெற முடிவதில்லை. <BR>இதனால் தான், அவனவன் செய்த வினைப்பயன்களை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியை ''காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது'' என்று சொல்லும் வழக்கம் வந்து விட்டது போலும்.<BR>* கோவிலுக்குச் செல்வது, திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, புனித நீரில் நீராடுவது, பூஜை செய்து இறைவனை துதிகளால் பூஜிப்பது போன்ற செயல்கள் ஒருவனை ஆன்மிகத்தில் செலுத்தும். </P>