ADDED : ஜன 12, 2017 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரது குறையைப் பொருட்படுத்தாமல், அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டப் பழகுங்கள்.
* உலகத்திற்கு மூலகாரணமாக விளங்கும் கடவுளை அறிவது ஒன்றே நிரந்தர இன்பத்தை தரும்.
* பணம், பதவியால் கிடைக்கும் இன்பத்தை விட, அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தான், மனிதன் அதிகம் துன்பப்பட வேண்டியிருக்கிறது.
* மனம் அன்பு மயமாகி விட்டால் யாருக்கும் தீங்கு எண்ணாத நற்குணம் உண்டாகும்.
- காஞ்சிப்பெரியவர்