sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சிறிது நன்மையாவது செய்!

/

சிறிது நன்மையாவது செய்!

சிறிது நன்மையாவது செய்!

சிறிது நன்மையாவது செய்!


ADDED : செப் 29, 2013 04:09 PM

Google News

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள். பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.

* நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது. நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட, அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

* கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர். நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.

* புத்திக்குத் தெரிந்தும் ஒரு தவறைச் செய்யும்போது அது பாவமாகிறது. புத்தி தங்கள் வசத்தில் இல்லாமல் இருப்பவர்கள் செய்யும் எந்தச் செயலும் பாவமாகாது.

* இயற்கையில் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது. மலையும் சமுத்திரமும் கூட காலச்சக்கரத்தில் மாறுதல் அடைகின்றன.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us