ADDED : ஜூன் 10, 2013 11:06 AM

* இதயம் கடவுளின் இருப்பிடம். ஆனால், அதை குப்பைத் தொட்டியாக வைத்திருக்கிறோம்.
* நல்ல எண்ணத்தால் இதயத்தை மெழுகி சுத்தப்படுத்துங்கள். தியானத்தின் மூலம் கடவுளை அதில் குடியமர்த்துங்கள்.
* மற்றவர்களிடம் வம்பு பேசி பொழுதை வீணாக்கக் கூடாது. அந்த சமயத்தில், கடவுளின் திருநாமத்தை ஜெபித்து புண்ணியம் சேருங்கள்.
* பந்து சுவரில் பட்டு மீண்டும் திரும்பி வருவது போல, செய்த செயலுக்கான பலன் நம்மிடமே திரும்பும்.
* தர்மம், சத்தியம் போன்ற உயர்ந்த விஷயங்களை உலகிலுள்ள மற்றவர்களிடம் பரப்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
* கவலைகள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கி விட வேண்டும். அப்போது நீருக்குள் மூழ்கிய குடம் போல மனம் பரமலேசாகி விடும்.
* பாவம் செய்யவேண்டும் என்று யாரும் விரும்பாவிட்டாலும் பாவச்சுமை ஏறிக் கொண்டே இருக்கிறது. மனதில் எழுகின்ற ஆசையே பாவத்திற்கான அடிப்படைக் காரணம்.
- காஞ்சிப்பெரியவர்