ADDED : டிச 20, 2017 03:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே.
*மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தி கொண்டிருந்தால் மனத்துாய்மையுடன் வாழ முடியும்.
*எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
*உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் தந்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்