ADDED : செப் 11, 2014 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளமே கடவுள் வாழும் வீடு. அதில் கண்டதையும் போட்டு குப்பைத் தொட்டியாக்கி விடக் கூடாது.
* தினமும் ஐந்து நிமிஷமாவது தியானத்தில் ஈடுபடுவது அவசியம்.
* இருக்கும் பணம் முழுவதையும் நம்முடையது என நினைப்பது கூடாது. சிறிதாவது தர்மவழியில் செலவழிக்க வேண்டும்.
* உடல் அழுக்கு நீங்க நாளும் குளிப்பது போல, மன அழுக்கு நீங்க தெய்வ வழிபாடு துணை செய்கிறது.
* ஒழுக்கமுள்ளவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், அழகும் உண்டாகி விடும்.
- காஞ்சிப்பெரியவர்