
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், கடவுளை வழிபட மறப்பது கூடாது.
* மனம் தீவிரமாக எதில் ஈடுபடுகிறதோ, அதை அடையும் சக்தியைப் பெற்று விடுகிறது. எனவே, மனதை நல்ல விஷயங்களில் செலுத்துங்கள்.
* அலட்சிய குணம் ஆபத்தானது. அதனால், நமக்கு மட்டுமின்றி மற்றவருக்கும் தீங்கு உண்டாகும்.
* பண்புடையவர்களால் தான் உலகம் இயங்குகிறது.
* போட்டியுணர்வு இருக்கும் வரையில், யாருக்கும் எதிலும் மனநிறைவு ஏற்படப் போவதில்லை.
* பணத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிக்கனம் தேவை.
- காஞ்சிப்பெரியவர்