
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பாலில் நெய் வெளிப்படுவது போல, உள்ளத்தைக் கடைந்து தியானித்தால் கடவுள் வெளிப்படுவார்.
* பெற்றோர் உணவைத் தருவது போல, நல்லாசிரியர் நல்லுணர்வைத் தருகிறார்.
* நம்மிடமுள்ள பொருளை அருளாக மாற்ற விரும்பினால், ஏழைகளுக்கு இயன்றதைக் கொடுத்து உதவுங்கள்.
* சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் கொடிய அதர்மம் இல்லை.
* கடவுளை நினைக்காத நாள் எல்லாம், நமக்கு உயிர் இருந்தாலும் இல்லாதது போலத் தான்.
- வாரியார்