sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மாதா அமிர்தனந்தமயி

/

பெண்களே கவனம் கவனம்

/

பெண்களே கவனம் கவனம்

பெண்களே கவனம் கவனம்

பெண்களே கவனம் கவனம்


ADDED : டிச 12, 2007 09:26 PM

Google News

ADDED : டிச 12, 2007 09:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர் சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது நம்மையறியாமலே அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம்தான். மழை லேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது. அதே மழை பலமாகப் பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறது.

சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம் நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப் பழக வேண்டும்.

பாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே இருக்கிறது. லட்சத்தில் ஒரு பெண் மட்டுமே தன்னை காம விகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக் கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.

தொடக்கத்தில் சாதகன் ஒரு பெண்ணின் சமீபத்தில் போகக் கூடாதுதான். ஆனால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடும் பட்சத்தில் எந்த கெடுதலும் நேராது.

பெண்கள் இயல்பாகவே மென்மையானவர்கள், இரக்கமுடையவர்கள். அவற்றை மறைக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் முடியாது. ஒரு ஆண் கொஞ்சமே தங்களிடம் அன்பு காட்டினாலும் அவர்கள் அப்படியே உருகி விடுவார்கள். ஆடவன் நேசம் கலந்த ஒரு பார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு. அவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ, மற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள சகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.



Trending





      Dinamalar
      Follow us