/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
மாதா அமிர்தனந்தமயி
/
பறவைகளுக்கு சாலைகள் இல்லை
/
பறவைகளுக்கு சாலைகள் இல்லை
ADDED : டிச 04, 2007 06:36 PM

கண்ணுக்குத் தெரியாத அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டடம் நிற்கிறது. வேர்கள்தாம் மரத்தை விழுந்துவிடாமல் தாங்கி நிறுத்துகிறது. உயர்வின் பின்னணியில் பணிவு இருக்கும். இருக்க வேண்டும்.
நீரில் மிதக்கும் கட்டை இழுபடுமே தவிர, அதற்கென்று சுயேச்சையான போக்கு இல்லை. அகந்தையின் போக்கில் மனிதர்கள் இழுபடுகிறர்கள். அவர்கள் ஞானம் பெறவேண்டுமென்றால் அகந்தையை விடவேண்டும்.
'நான் யார்' என்ற விசாரத்தில் 'எல்லாம் என்னுள் இருக்கிறது' என்கிற எண்ணந்தான் முதற்படி. அனைத்தும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு விட்டால் அவனிடம் நம்மை ஒப்புவித்துக்கொள்வது எளிது.
உடல், மன ஆற்றலைவிட ஆன்மிக ஆற்றல் உயர்ந்தது. ஆன்மவலிமை உள்ளவரால் தான் துயருற்றோருக்கு உதவி அவர்களை அமைதிபெறச் செய்ய முடியும்.
எதுவெல்லாம் எனதென்று, யாரெல்லாம் என்னுடைய உறவென்று மனிதன் நினைக்கிறானோ அந்த உடைமைகளும் உறவுகளும் அவனுடைய மரணத்திலே கூட வருவதில்லை. எல்லாம் அவனுடையவை (இறைவன்) என்று எண்ணும்போது பற்று வராது. பற்றினால் உண்டாகும் துன்பமும் வராது. மனிதனும் அவனது விருப்பத்துக்கான பொருள்களும், மக்களும் அழிந்துபோக, இறைவன் மட்டுமே நித்தியமாயிருக்கிறான்.
வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு சாலைகளில்லை. இந்த மனிதர்களுக்கும், அவர்கள் செல்லும் வாகனங்களுக்குத்தான் தெருக்களும், வீதிகளும் தேவை. தொடக்கநிலை சாதகனுக்கு திட்டமிட்ட சாதனை முறை அவசியம்.