
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வ வளம் என்பது அதிக பணத்தைப் பெறுவதல்ல. போதும் என்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம்.
* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இரு விஷயங்கள் வளர்ச்சி அடைகின்றன.
1. பொருளின் மீது பேராசை
2. வயதின் மீது பேராசை.
* இருவிஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவரை நன்றி உள்ளவர், பொறுமை மிக்கவர் என குறித்துக் கொள்ளப்படும்.
1. இறைநெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப் பார்த்தல்.
2. உலக வசதிகளைப் பொறுத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து நன்றி செலுத்துதல்.
* பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள். அதுவே சிறந்த விஷயம்.
* கடனை உடனே அடைப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள்.
* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்க்கப்பாருங்கள். அதுவே அன்பை பலப்படுத்தும்.