ADDED : பிப் 23, 2024 11:02 AM

* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.
* நற்செயல்களை செய்பவருக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என்பதே வாழ்க்கையின் நியதி.
* கடவுளின் மீது நம்பிக்கை கொள். இதன்மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவாய்.
* உயிர் வாழ உணவு தேவை. அதுபோல் சுதந்திரமாக வாழ சிலவற்றை தியாகம் செய்.
* அனைவரிடமும் அன்பு காட்டுவதே தர்மத்தில் சிறந்தது.
* யார் மனம் பலவீனமாக இருக்கிறதோ அவரது மனதில் தீயசிந்தனை தோன்றும்.
* மனதில் தீய எண்ணம் தோன்றும்போதே அதை அகற்றிவிடு. இல்லையெனில் அது செயலாகிவிடும்.
* பிறருக்கு உதவி செய். அதற்கு அளப்பரிய சக்தி உள்ளது.
* அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. உன் வாழ்நாள் முழுவதும் அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும்.
* எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாதே. அதுதான் உன் மனதிற்கு நல்லது. வாழ்க்கைக்கும் சிறந்தது.
* எல்லோராலும் அறிவை பெற முடியும். ஆனால் பள்ளிக்கூடம் சென்றால் மட்டுமே அறிவுடன் சேர்ந்து ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.
* கோபப்படாதே... மீறினால் உன் முகத்தின் அழகை அது கெடுக்கும். ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.
* வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது உன் கடமையாக இருக்கட்டும்.

