ADDED : பிப் 10, 2017 02:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நான் யார் என்ற கேள்வியை கேள். பதிலைத் தேடிச் செல். உனக்கான வழி தெரிய வரும்.
* துறவு என்பது வசதிகளைச் சுருக்குவது அல்ல. மனதால் விரிவடைந்து எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுவது.
* தன்னை அறிந்தவனால் மட்டுமே, உலகத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
* ஆன்மிகத்தின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மற்றவர்களுக்கு நீ செய்ய வேண்டிய உபதேசம்.
- ரமணர்