
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களுக்கு இருக்கும் திறமையும், செல்வமும், பலமும் பிறருக்கு நன்மை தரும் விதத்தில் அமையட்டும்.
* கடமையில் அக்கறையுடன் ஈடுபடுங்கள். உள்ளமும், உடலும் ஆரோக்கியம் பெற இதுவே சிறந்த வழி.
* சந்தனத்தை தொட்ட கையில் மணம் கமழும். கடவுளை நினைக்கும் மனதில் தெய்வீகம் கமழும்.
* குடும்பத்திற்காகப் பணம் தேடுவதில் தவறில்லை. ஆனால், அதிலும் ஒரு வரையறை இருப்பது நல்லது.
* யாரையும் அவமதிக்காதீர்கள். உலகில் அற்பமான மனிதர் என்று யாரும் கிடையாது.
-சாரதாதேவியார்