
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் சாதிக்க முடியாததை, சாதித்துக் காட்டும் சக்தி பக்திக்கு இருக்கிறது. * கடவுளை அடைய விரும்பினால், அதற்குரிய வழி உயிர்களை நேசிப்பதே. * கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் சொல்வதால், மனம் தூய்மை பெறும். * மன ஒருமையின்றி வழிபடுவதை விட, ஒருமுக சிந்தனையுடன் வழிபடுவதே சிறந்தது. * கணநேரம் கூட கடமையை விட்டு விலக வேண்டாம். * அறிவுக்கூர்மையால் விவாதத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால், அதைக் கொண்டு கடவுளை அளக்க முடியாது. -சாரதாதேவியார்