ADDED : மார் 11, 2013 10:03 AM

* 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். மனதில் ஒளிந்திருக்கும் கீழான விலங்கு உணர்வுகள் காணாமல் மறைந்து விடும்.
* யாரையும், இழிவாக நினைப்பது கூடாது. இல்லாவிட்டால் கடவுளை இகழ்ந்த பாவம் நம்மைச் சேர்ந்துவிடும்.
* தினமும் தியானம் செய்ய ஏற்ற நேரம் அதிகாலை பிரம்மமுகூர்த்தம். அந்தவேளையில் கண் விழிப்பவர்கள் வாழ்வு நலமாக அமையும்.
* கடவுளின் ஆற்றல் மின்சக்தி போன்றது. நாம் பல்பு போன்றவர்கள். உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொறுத்து, ஒளி வெளிப்படுகிறது.
* சம்பாதிப்பதில் ஒருபகுதியை எதிர்காலம் கருதி சேமிப்பது போல, ஏழை எளியவர்க்கு தர்மம் செய்வதும் கடமை.
* பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புபவர்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.
* கண்களால் காண்பதாக தவறாக கற்பனை செய்கிறோம். ஆனால்,<< உண்மையில் கடவுளின் கண்களால் தான் நாம் இந்த உலகையே காண்கிறோம்.
- சாய்பாபா