sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

/

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!


ADDED : ஜூலை 21, 2010 08:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2010 08:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தொடக்கத்தில் கறையான் சிறியதாகவே தோன்றும். சிறுகச் சிறுக அவை பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதுமே செல்லரித்துப் போகச் செய்துவிடும். அதுபோல, தீயகுணங்கள் சிறிதாகத் தான் ஆரம்பத்தில் இருக்கும். முடிவில் ஒருவனை முழுவதுமாக அழித்துவிடும்.

*வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் வருவது இயற்கையே. அதையே சிந்திக்காமல், கவலையை வீசி எறிந்துவிட்டு ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

* சின்னஞ்சிறிய எறும்பு கூட சர்க்கரை இருக்கும் இடத்திற்கு கூட்டமாக வந்து உண்ணுகிறது. ஆனால், மனிதனுக்கு அந்த பெருந்தன்மையோ, ஒற்றுமை உணர்வோ இருப்பதில்லை. தாராள மனப்பான்மையை எறும்பிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* சந்தனக் கட்டையை எரித்துக் கரியாக்குபவன் முட்டாள்.  மணமும்,குளிர்ச்சியும் சந்தனம் தருவதுபோல, சத்தியத்தை அறிவதற்காக கொடுக்கப்பட்ட உடல் இது. அதை அற்பசெயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றாலும், எல்லோரும் இறைவனைக் காண வேண்டிய இடம் ஒன்று உண்டு. அது தான் நம்முடைய உள்ளம்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us