ADDED : மே 31, 2017 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துன்ப இருளில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில் அருள் ஔி பரவத் தொடங்கும்.
* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை மறந்தால் நம்மால் உயிர் வாழவே முடியாது.
* இனிமையற்ற உண்மை, இனிமையான பொய் இரண்டுமே வாழ்வில் விலக்கப்பட வேண்டியவையே.
* உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றென்றும் நிலைத்திருக்கும் சக்தி படைத்தது.
* ஆசிரியரைத் தேடி அலையாதீர்கள். உலகமே ஒரு பல்கலைக்கழகம். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்களே.
சாய்பாபா