ADDED : டிச 20, 2013 05:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏழை மக்களுக்கு சேவை செய்வதே சாதனை. நோயாளிகள், ஆதரவற்றோர், சிறைக்கைதிகள், முதியோர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* இரும்பு துருப்பிடித்து விட்டால், காந்தத்தால் கவர்ந்திழுக்க முடியாது. அதுபோல, மனம் தீமையின் இருப்பிடமாகி விட்டால் கடவுளின் அருளை பெற முடியாமல் போய்விடும்.
* வீட்டைக் கோயிலாக மாற்றுங்கள். அங்கே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுங்கள்.
* அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.
- சாய்பாபா