sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

புடலங்காயைப் பாருங்க!

/

புடலங்காயைப் பாருங்க!

புடலங்காயைப் பாருங்க!

புடலங்காயைப் பாருங்க!


ADDED : ஏப் 25, 2011 12:04 PM

Google News

ADDED : ஏப் 25, 2011 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆடை அழுக்கை நீக்க சோப்பும், நீரும் பயன்படுவது போல மன அழுக்கை நீக்க அன்பும், தொண்டும் பயன்படுகிறது.

* உன் இதயத்தை அன்பில் நன்றாக நனைத்துவிடு, செயல்களை நேர்மையிலும், உணர்ச்சிகளைக் கருணையிலும் நனைத்துவிடு, இப்படிச் செய்தால் நீ கடவுளை மிக விரைவாக அடைவாய்.

* மனதிலுள்ள எண்ணங்களை நல்லவையாக மாற்றிக் கொண்டால் உலகம் அதற்குத்தக்கவாறு காட்சியளிக்கும். கண்களில் தெய்வீகம் நிரம்பி வழிவதுடன், காண்பதெல்லாம் கடவுளாக இருக்கும்.

* கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும். பிறகு மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.

* புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்.

* புடலங்காயில் கல்லைக் கட்டினால் வளையாது வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால் நேராக வாழ்வான்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us