sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

காலம் கடவுள் போன்றது

/

காலம் கடவுள் போன்றது

காலம் கடவுள் போன்றது

காலம் கடவுள் போன்றது


ADDED : ஏப் 15, 2010 09:20 AM

Google News

ADDED : ஏப் 15, 2010 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனிடம் எதையும் கேட்க வேண்டியதே இல்லை. தூய உள்ளம் நம்மிடம் இருக்குமானால், அவரே உங்களது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி அருள்வார்.

* தாய் தன் பிள்ளைகளின் தேவைகளை தானாகவே செய்வது போல, கடவுளும் தாயாக இருந்து நம்மை காப்பாற்றி வருகிறார். நாம் அதை உணரத் தவறி விடுகிறோம்.

* சின்னச்சின்னத் தேவைகளுக்காக கடவுளிடம் முறையிடத் தேவையில்லை. இதனால் அவருடைய அருகாமையைத் தவறவிட்டு விடுகிறோம்.

* பணத்தை வீணாக்காதீர்கள். குறிப்பாக, இளைஞர்கள் வீணாகச் செலவு செய்வது வருந்தத்தக்கது. பெற்றோரின் பணத்தை விரயம் செய்வதற்கு நமக்கென்ன உரிமை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

* காலம் மிகப்பெரிய சக்தி. கடவுளுக்கு நிகரானது. காலத்தை வீணாக்குவதால் வாழ்க்கையையே தொலைத்தவர்களாகி விடுவோம். இறைப்பணிகளில் ஈடுபட்டு தெய்வீகத் தன்மையை உணருங்கள்.

* குறைவாகப் பேசுங்கள். நிறைவாகப் பணிபுரியுங்கள். அப்போது தான் நமக்குள் இருக்கும் ஆற்றல் வளரத் தொடங்கும். வாரம் ஒருமுறையாவது மவுனவிரதத்தை மேற்கொள்ளுங்கள்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us