ADDED : ஆக 19, 2009 02:43 PM

<P>* தெய்வீக இயல்பு நிலைக்க விரும்பினால், உடல் என்னும் <BR>
<P>கோவிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியும்.
<P>* சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும், உண்மையையும் கடைபிடிப்பவனிடமே கடவுளின் அருள் பரிபூரணமாய் இருக்கும்.
<P>* மனம் ஒரு கண்ணாடி போன்றது. அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், அதன் மீது தூசு படியாமல் வைத்துக் கொள்வதும் நம் அடிப்படைக் கடமையாகும்.
<P>* கடவுளிடம் உங்களுக்கு வேண்டியதை உறுதிப் பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை எப்போதுமே அதற்கான நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பார்.
<P>* இறைவனுக்கு தொண்டனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.
<P>* வாழ்க்கையில் எது நிகழ்ந்தாலும், எத்தனை இடர்ப்பாடுகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியும் தன்னம்பிக்கையும் சிறிதும் இழக்காதீர்கள்.
<P>* நம்பிக்கையுடன் இருப்பவர்கள் நேர்மையுடன் செய்யும் பிரார்த்தனையை இறைவன் செவி கொடுத்து கேட்கிறான்.
<P><STRONG>- ஸ்ரீஅன்னை</STRONG></P>