/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஸ்ரீ அன்னை
/
வீண்பயத்தை தூக்கி எறியுங்கள்
/
வீண்பயத்தை தூக்கி எறியுங்கள்
ADDED : செப் 08, 2009 03:32 PM

<P>* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாம் மாறிவிடக்கூடிய ஒன்றே என்பதை உணருங்கள்.
<P>* வெயிலும் கடுமையும் வந்தால் குளிரும் மழையும் வரக்காத்திருக்கிறது என்பதை அறிவீர்கள். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் வரத்தான் போகிறது என்பதை எண்ணி ஆறுதல் அடையுங்கள்.
<P>* வாழ்க்கையை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொள்ளும் மனிதர்களிடம் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையாக லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.
<P>* ஆண்டவன் லீலைகளில் மகிழ்ச்சி அடைபவன். ஆண்டவன் வைக்கும் சோதனைகளை எல்லாம் விளையாட்டாகவே எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டவனை உங்களின் நெருக்குமான தோழனாக ஏற்று இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
<P>* சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும், வீணான பயங்களையும் தூக்கி எறியுங்கள். வெற்றியும், மகிழ்ச்சியும், மனப்பக்குவமும் கிடைக்க இதுவே சிறந்த வழியாகும்.
<P><STRONG>-ஸ்ரீஅன்னை</STRONG> </P>