sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

வாழ்வின் நோக்கம் என்ன?

/

வாழ்வின் நோக்கம் என்ன?

வாழ்வின் நோக்கம் என்ன?

வாழ்வின் நோக்கம் என்ன?


ADDED : மே 03, 2011 08:05 AM

Google News

ADDED : மே 03, 2011 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனுக்குச் செய்யும் இடைவிடாத நிவேதனமாக நீ உன்னுடைய வேலையைச் செய்தால் தியானமே தேவையில்லை.

* தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள் நேர்மையுடன் பிரார்த்தனை செய்து தாங்கள் கேட்டதை இறைவனிடம் இருந்து

தவறாமல் பெற்றுவிடுகின்றனர்.

* தன்னில் இறைவனைக் கண்டுபிடித்து அவனுடைய தர்மத்தின்படி, சட்டத்தின்படி வாழ்தலே உண்மையான புகழ், உண்மையான வீர காவியம்.

* வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக அல்லது உண்மைக்காக வாழ்தல், குறைந்தபட்சம் தனது ஆன்மாவுக்காக வாழ வேண்டும்.

* எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனை அறிகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் துன்பங்கள் பறந்து போகின்றன.

* இறைவனின் சொற்கள் ஆறுதலையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக்கரங்கள் எல்லையில்லா ஞானத்தை மறைக்கும் ஒவ்வொரு திரையையும் விலக்குகின்றன.

* எதற்கும் எதிலும் இறைவனைச் சார்ந்திருப்பது எவ்வாறு என்பதை நாம் அறிதல் வேண்டும். இறைவனால் மட்டுமே இடையூறுகளையெல்லாம் வெல்ல முடியும்.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us