ADDED : ஜன 20, 2017 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லாம் விதி என்று செயலாற்றத் தயங்குபவன் கோழை. வீரனோ தனக்கான விதியைத் தானே வகுத்துக் கொள்வான்.
* நாம் நம்மைப் பற்றி சிந்திக்காத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை வாழ்கிறோம்.
* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு உதவி செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
* வெறுப்பு என்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானது.
- விவேகானந்தர்