ADDED : செப் 20, 2013 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கையில் முன்னேற துணைபுரிவது எதுவோ அதுவே நன்மை. கீழ்நோக்கி வீழ்ச்சிக்குத் துணை புரிவது எதுவோ அது தீமை.
* தன்னம்பிக்கை கொண்டவன் வாழ்வு சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இந்த உண்மையை எப்போதும் மறந்து விடாதே.
* பொறாமையும், சோம்பலும், வெறுப்பும் அடிமையின் இயல்புகள். உள்ளத்தில் இவற்றை நுழைய அனுமதி அளிக்காதே.
* சுயநலத்தோடு வாழாதே. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறக்கவே பழகு.
* உயிர் வாழ்வதற்கு அறிகுறியே, வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சி அடைவது தான். துணிந்து நின்று பணி செய்தால் தான் இது சாத்தியம். எனினும், அதில் கிடைக்கும் பலனை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும்.
- விவேகானந்தர்