
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனித உடல்தான் உலகத்திலேயே மிகச்சிறந்த உடலாகும். மனிதனே மேலான ஜீவன். எல்லா மிருகங்களையும் தேவர்களையும் காட்டிலும் உயர்ந்தவன். இந்தப் பிறவியை நாம் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* உனக்குள் இருக்கும் ஆற்றல் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். வேறு எவரும் உனக்கு கற்பிக்கவும் முடியாது. ஆன்மிகவாதி ஆகிவிடவும் முடியாது. உனது சொந்த ஆன்மாவைத்தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.
* எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே நல்லதையே விதைக்க கற்றுக்கொள்வோம்.
* காற்றை பயன்படுத்தி செல்லும் பாய்மரப் படகு போல, தகுந்த சந்தர்ப்பம் வரும்போது அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- விவேகானந்தர்