குருபெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் : சிம்மம்
25 மே 2026 to 07 ஜூன் 2027
முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

சிம்மம்சிம்மம்: மகம்: விடாமுயற்சி வெற்றிதரும்
ஞான மோட்சக் காரகனான கேது, ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள், எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பவர்கள். நீதி நியாயம் நேர்மை தவறாதவர்கள். பிறருக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழக்கூடியவர்கள். எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் செல்வாக்குடன் திகழக்கூடியவர்கள். உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியும் குருவே ஆவார்.
இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி, நட்பு, அதிநட்பு தாரைகள் என்பதால், மே 26 முதல் உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் காலத்திலும், அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்கும் காலத்திலும் நற்பலன்களையே வழங்குவார்.
விரய குருவின் காலம் செலவுகளை அதிகரிக்கும். அலைச்சலை உண்டாக்கும். செய்துவரும் தொழிலில் நெருக்கடியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்றத் தொல்லைகளையும், விரும்பாத இடத்திற்கு மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது பொது விதியாக இருந்தாலும், உங்கள் ராசிநாதனுக்கு குரு நட்பானவர் என்பதால் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்க மாட்டார். அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிப்பவர், பூர்வ புண்ணிய பலன்களை வழங்குவார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தின் காரணமாக வெளியூர் பயணங்களை அதிகரிப்பார். சிலருக்கு தான் ஓரிடம் குடும்பம் ஓரிடம் என்று வாழவேண்டிய நிலை உருவாகும். வருமானம், அந்தஸ்து என உங்கள் கவனம் செல்லும். சிலருக்கு புதிய சொத்துகள் சேரும்.
சஞ்சாரம், பார்வை பலன்
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதால், அவர் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களைப் பலப்படுத்துவார் என்பது விதி. மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு, 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால், மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் அமையும். நோய் நொடி என்று வாழ்ந்த நிலை மாறும். கடன் தொல்லை நீங்கும். வீண் செலவுகள் குறையும். தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். விரோதிகள் தொல்லை விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். பணவரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அக். 20 முதல், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு, 5,7,9ம் இடங்களைப் பார்ப்பதால், உங்கள் நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். ஆடை ஆபரணம் சேரும். வசதி வாய்ப்புகள் உண்டாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். கூட்டுத்தொழில் லாபம்தரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். திருமணத்தடை விலகும். புதிய சொத்து சேரும். செல்வாக்கு உயரும். உங்களுக்கென்று தனி கௌரவம் அந்தஸ்து ஏற்படும். சிலர் வசதியான வீட்டில் குடியேறுவீர்கள்.
அஸ்தமனம், வக்ர காலங்கள்
ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும்.
பொதுப்பலன்
குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், ஆரோக்கியம் சீராகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய நிலம், வாகனம், வீடு என்று சேரும். இதுவரை உங்களுக்கிருந்த பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வாழ்வில் புதிய நம்பிக்கைப் பிறக்கும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
தொழில்
அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தொழில்காரகன் சனிக்கு, மே 26 முதல் குருப் பார்வை உண்டாவதால் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் வளர்ச்சி அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஐ.டி., ஏ.ஐ., கால்நடை, இயந்திரத்தொழில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜுவல்லரி, ஆடை வணிகம், செய்தித்தாள், மீடியா, காலண்டர், டைரி, தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை உண்டாகும். நிர்வாகத்தால் பாராட்டப்படுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பகுதி நேரமாகவும், தினக்கூலிகளாகவும் பணியாற்றி வந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்கள்
ஜென்ம ராசிக்குள் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி என உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் அதிலிருந்து உங்களை மீட்டெடுக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் அடைந்த சங்கடங்கள் நீங்கும். திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
கல்வி
பாக்ய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
மே 26 முதல் சுகம், ருண ரோகம், அஷ்டம ஸ்தானங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.
குடும்பம்
எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை, போராட்டம் பிரச்சனை கடன்தொல்லை, நோய் நொடி என்று வாழ்ந்து வந்தவர்களுக்கு இக்காலத்தில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.
பரிகாரம்
காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
பூரம்: குருப்பார்வையால் நன்மை
அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள், நினைத்ததை சாதிப்பதில் வல்லவர்கள், எதிரிகளை வீழ்த்துகின்ற சாமர்த்திய சாலிகள், எடுத்த வேலையை முடித்திடக்கூடிய சக்தி மிக்கவர்கள், கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல் பூரத்தில் பிறந்தவர்களுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு செல்வாக்கு மிக்கவர்கள் நீங்கள். உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரன் குருவிற்கு பகையானவர் என்றாலும், ராசியாதிபதி சூரியனுக்கு நட்பானவர். இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி, ஸாதகம், நட்பு, அதிநட்பு தாரைகள் என்பதால், மே 26 முதல் உங்கள் ராசிக்கு 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும், அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் காலத்திலும் நற்பலன்களையே வழங்குவார் குரு.
மே 26 முதல் விரய குருவின் காலம் தொடங்குவதால் அலைச்சல் அதிகரிக்கும், செலவுகள் கூடும், தொழிலில் பின்னடைவு ஏற்படும், உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டு வேலை நிமித்தமாக சிலருக்கு வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக இருந்தாலும், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி குரு பகவான் என்பதால் அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அனைத்திலும் முன்னேற்றத்தையே ஏற்படுத்துவார். அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் சிலருக்கு ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். செய்துவரும் தொழிலின் காரணமாகவும், பார்த்துவரும் வேலையில் ஏற்படும் மாறுதலாலும் குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழ வேண்டிய நிலை உருவாகும் என்றாலும், இக்காலத்தில்தான் எல்லாவிதமான பாக்யங்களும் கிடைக்கும். இடம், வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்யம், வேலை என வாழ்க்கையின் அத்தனை லட்சியங்களும் நிறைவேறும்.
சஞ்சாரம், பார்வை பலன்
மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு, 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால், உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலும் வேலையிலும் ஏற்பட்ட எதிர்ப்பு, மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சிலர் புதிதாக இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் உங்களைவிட்டு விலகும். வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். நஷ்டத்தில் இயங்கிவரும் தொழில் மீண்டும் வளர்ச்சி அடையும். அக். 20 முதல், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு 5,7,9ம் இடங்களைப் பார்ப்பதால், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உறவுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தோரின் வேண்டுதல் நிறைவேறும். சிலருக்கு இரண்டாவது குழந்தை சுபமாக பிறக்கும். திருமணத்தில் தடையை சந்தித்து வருபவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். சிலருக்கு மறுமணமும் நடந்தேறும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேரும் நிலை ஏற்படும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். புதிய வீடு, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற கனவு நனவாகும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

குருப்பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப கடகம் மற்றும் சிம்ம ராசிகளில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் உங்கள் வாழ்வை வளமாக்கும். நவ. 13 முதல் யோகக்காரகன் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். பயம் போகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை அந்தஸ்து கிடைக்கும்
தொழில்
பூரத்தில் பிறந்தவர் போராட்டத்திலும் சாதிப்பர். போராடியும் சாதிப்பர் என்பதால், எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவர்களாக இருப்பீர்கள். செய்யும் தொழிலில் ஜெயித்துக் காட்டுவீர்கள். இக்காலத்தில் குருவின் பார்வைகளுடன், 135 நாட்கள் செவ்வாய், 120 நாட்கள் சூரியனின் சஞ்சாரங்களும் சாதகமாக இருப்பதால் செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். ஜுவல்லரி, ஃபேன்சி ஸ்டோர், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆடை வணிகம், கவரிங் நகைகள், வாகன விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை, பியூட்டி பார்லர், நவீன சாதனங்கள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூப் தொழில்கள் லாபம்தரும்.
பணியாளர்கள்
வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீது பயம் ஏற்படும். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையும் உருவாகும். உள்நாட்டில் வேலைப் பார்ப்பவர்கள் திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் பெறுவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
போராட்டமும் பிரச்சனையாகவும் இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவால் நீண்டநாள் கனவுகள் நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் வயதிற்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொன் பொருள் சேரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும்.
கல்வி
படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.
உடல்நிலை
குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதுடன், நவ. 13 முதல் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வந்த நோய்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். நீண்டநாள் நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். விபத்து, பரம்பரைநோய், தொற்றுநோய், பருவநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும். மருத்தவச்செலவுகள் குறையும்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் தொல்லை விலகும். வருமானம் அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வீட்டில் மங்கள ஓசை கேட்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.
பரிகாரம்
மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சிரமம் நீங்கும்.
உத்திரம் 1: தொழிலில் முன்னேற்றம்
ஆத்மக்காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். துணிச்சலாகவும், அதே நேரம் திட்டமிட்டும், சூழ்நிலை அறிந்தும் செயல்படக்கூடிய நீங்கள் நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவராக இருப்பீர்கள்.
உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12 ம் வீடான விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வீண் செலவு, அலைச்சல், செய்துவரும் தொழிலில் போராட்டம், பார்த்துவரும் வேலையில் நெருக்கடி, சிலருக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையினை ஏற்படுத்துவார் என்பது பொது விதியாக இருந்தாலும் உங்களுக்கு அவரே பூர்வ புண்ணியாதிபதி என்பதால் உங்கள் கனவுகளையும் நனவாக்குவார். அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உழைப்பு கூடும். வருமானத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றாலும் சிலர் வேலை மற்றும் தொழில் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வசிக்க நேரும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் லாப குருவாகவும், அக். 20 முதல் 12ம் வீடான விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு நேரம் சாதகமாகும். புதிய வீடு, சொத்து என வாங்கும் நிலை உண்டாகும். அக். 20 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்று வருத்தப்படநேரும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். தொழிலில் போட்டி, எதிர்ப்பு என ஏற்படும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக இருந்தாலும், உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு நட்சத்திரம் என்பதால் சோதனைகளும் சாதனைகளாகும். செய்யும் செலவுகளும் வாழ்வின் ஆதாரமாகும்.
சஞ்சாரம், பார்வை பலன்
குரு பகவான், தான் பார்க்கும் இடங்களுக்கு யோகப்பலன்களை வழங்கிடக்கூடியவர். அதன் காரணமாகவே குருப் பார்க்க கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4,6,8 ம் இடங்களையும், அக். 20 முதல் 5,7,9ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். செய்துவரும் தொழிலில் நிலவிய போட்டி, எதிர்ப்பு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் நிம்மதியான நிலை உருவாகும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்குவரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். புதிய வீடு வாகனம் செல்வாக்கு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7ம் இடங்களையும், அக். 20 முதல் 4,6,8ம் இடங்களையும் குருப் பார்ப்பதால், வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். சூழ்நிலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவர். வருமானம் உயரும். சொந்த வீடு வாகனம் அமையும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் நட்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிலர் புதிதாக நிலம் வாகனம் வாங்குவீர்கள். வசிக்கும் வீட்டைப் பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.

குருவின் பார்வைகளும், செவ்வாய் சூரியன் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். செய்துவரும் தொழில் லாபம் அடையும் பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
தொழில்
உத்திரத்தில் பிறந்தவர் உறுதியானவர் என்பதுடன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருந்திடக்கூடியவர் என்பதால் செய்துவரும் தொழில்மீது அக்கறையும் பக்தியும் இருக்கும். ஷேர் மார்க்கெட், டிராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ., கம்ப்யூட்டர், ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில், ஆன்லைன் வர்த்தகம், நிதி நிறுவனம், ரெடிமேட்ஸ், அழகு சாதனம், வாகன விற்பனை, பப்ளிகேஷன் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் கூடும்.
பணியாளர்கள்
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற மதிப்பும் ஊதியமும் கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும் உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்
கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நிகழும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கையில் பணம் புழங்கும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் தேடிவரும்.
கல்வி
படிப்பில் பின் தங்கியிருந்த மாணவர்களும் இக்காலத்தில் முன்னேற்றம் அடைவர். பொதுத்தேர்விலும், போட்டித்தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ஆயுள்காரகன் சனி பகவானுக்கு குருப் பார்வை உண்டாவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு தொடர்ந்து சென்று வந்தவர்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.
குடும்பம்
குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், சூரியன் செவ்வாய் சஞ்சார நிலைகளும், குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்தும். நீண்டநாள் கனவுகளை நனவாக்கும். சொந்த வீடு வாகனம் என்ற ஆசைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பொன் பொருள் சேரும் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்
சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.