sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

குருபெயர்ச்சி பலன்கள்

/

துலாம்

/

துலாம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : துலாம்
19 அக் 2019 to 30 அக் 2020

முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

துலாம்குரு பகவான்  இப்போது 3ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக குரு 3ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன் தான் நடக்குமோ என அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைகள் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இது சுமாரான இடம் தான். குரு சாதகமற்று இருந்தாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை. காரணம் கேது, சனி சாதகமான இடத்தில் இருந்து நற்பலன் தருவர். நீங்கள் கீழே விழாதவாறு அவர்கள் தாங்கி பிடித்து கொள்வார்கள். சனி பலத்தால் சங்கடம் அனைத்தும் உடனுக்குடன் தீர்ந்து விடும்.

குருவின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் இருந்தாலும் செலவுக்கு பஞ்சமிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம்.  

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. இருப்பினும் சனிபகவான் பொருளாதார வளம், தொழில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு ராகுவால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர்.

தனியார் துறை பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். ஆனால் குருவின் பார்வையால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டி பறிக்கப்படலாம். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.  

கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனைக் காண்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவி வந்து சேரலாம்.  2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். தொழில் ரீதியான பயணம் செல்ல வாய்ப்புண்டு.  2020 ஆக.31 முதல்  சமூகநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள்  மன உளைச்சலுடன் காணப்படுவர். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது பயனளிக்கும். குரு பார்வையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விடாமுயற்சியால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். நெல்,கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில்  கூடுதல் வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை.  

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர்.  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் மத்தியில்  பெருமை உயரும். அவர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு நண்பர்களின் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  உடல்நலக்குறைவு வரலாம்.

பரிகாரம்:
*  வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
*  திங்களன்று சிவபெருமானுக்கு வில்வ மாலை
*  பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us