மாத ராசி பலன்
மாத ராசி பலன் : துலாம்
15 டிச 2025
முந்தய மாத ராசி பலன்

துலாம்
துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்..: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதமாகும். தைரிய, வீரிய, பராக்கிரம காரகன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முடியாது என மற்றவர்கள் கைவிட்ட வேலைகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். உங்கள் லாபாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். ராசி நாதனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 31
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9
பரிகாரம் அபிராமியை வழிபட அல்லல் நீங்கும். நன்மை நடக்கும்.
சுவாதி: வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எனத் தெரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் கர்ம காரகனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும். உறவினர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். பிள்ளைகளின் வழியாக நெருக்கடிகளை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சங்கடம் தோன்றும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் உங்கள் லாபாதிபதியும், தன குடும்பாதிபதியும் சஞ்சரிப்பதால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமாக மாறும். எப்போதும் தேவையான அளவிற்கு பணம் கையில் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். டிச 25 க்குள் நீங்கள் எதிர்ப்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். ஜன. 11 முதல் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவர். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வயதானவர்கள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 31. ஜன. 1
அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 24. ஜன. 4, 6, 13
பரிகாரம் பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: எந்த ஒன்றையும் முன்னதாக அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஞானக் காரகன் குரு டிச. 21 வரை கடகத்திலும், அதன் பின் மிதுனத்திலும் வக்கிரமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். குழப்பத்திற்கு ஆட்படுவீர்கள் என்றாலும், வக்கிரமடையும் குரு முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கக் கூடியவர் என்பதால் டிச.21 வரை பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வர வேண்டிய பணம் வரும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். டிச. 22 முதல் திடீர் வாய்ப்பு தேடிவரும். உடல் நிலையிலும், மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து முயற்சிகளை வெற்றியாக்குவதுடன் பாக்ய ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தைரிய வீரிய காரகனும் உங்கள் தன குடும்பாதிபதியுமான செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து முன்னேற்றங்களை வழங்குவதுடன் உங்கள் சத்ரு ஜெய ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால் உடல் பாதிப்பு விலகும். தொழில் ரீதியாக தோன்றிய எதிர்ப்பு மறையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் வரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக் காரகன் கேதுவால் சேமிப்பு உயரும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன. 1, 2
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 24, 30. ஜன. 3, 6, 12
பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.