தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/கும்பம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

மாத ராசி பலன் : கும்பம்
17 செப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கும்பம்

அவிட்டம் 3, 4 ம் பாதம்: எடுக்கும் முயற்சியில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, புரட்டாசி மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதம். மாதத்தின் தொடக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் சஞ்சரித்தாலும், செப்.20 முதல் ருண, ரோக, சத்ரு ஜெய ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் மனநிலையிலும் எதிர்பாராத சங்கடம், குழப்பம் ஏற்படும். எதிரிகளாலும் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் செலவு எல்லை மீறும். தொழில் ரீதியாகவும் போட்டிகள், பிரச்னையை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். உடன் இருப்பவர்களும் உங்கள் நிலையைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வர். அரசியல்வாதிகளுக்கு  தலைமையுடன் இடைவெளி உண்டாகும். தொண்டர்களும் விலகத் தொடங்குவர் என்றாலும் தசா புத்தி சாதகமாக இருந்தால் மேற்கண்ட சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது. பெண்கள் குடும்பத்தினரின் ஆலோசனைகளை ஏற்பதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் அவசியம். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வேலைப்பளு கூடும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: அக். 9
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 26, 27. அக். 8, 17
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட சங்கடம் தீரும். 

சதயம்: புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் சக்திக்கு மீறிய வேலைகளில் ஈடுபட செய்து சங்கடத்தை ஏற்படுத்துவார். எதிர்பார்த்த பணம் வராமல் போகும். சிலருக்கு முதலீடு விரயம் ஆகும். உடல்நிலையும் ஒருநேரம் போல் மறுநேரம் இருக்காது. குழந்தைகள் வழியில் எதிர்பாராத பிரச்னையை சந்திக்க நேரும். பணியாளர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். தன்னுடன் இருப்பவரை பகைத்துக் கொள்ளாமல் வேலை பார்ப்பது நன்மையளிக்கும். எடுக்கும் வேலைகளிலும் நிதானமாகவும் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். அக். 9 வரை சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சந்திப்பதால் கையில் பணம் புழங்கும். மற்றவருக்கு உதவி செய்யும் நிலை இருக்கும். தனகாரகன் குருபகவானின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்ய முடியும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியும். சூரியன் 8ல் மறைவு பெறுவதால் சட்ட ரீதியான பிரச்னை சிலருக்கு ஏற்படும். காவல்துறை, நீதிமன்றம் வழியாக சில சங்கடங்களை சந்திக்க நேரும். பெண்கள் புதியவர்களிடம் விலகி இருப்பதும் தங்கள் குடும்ப ரகசியத்தை வெளி நபரிடம் பகிராமல் இருப்பதும் நல்லது. சிலருக்கு சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

சந்திராஷ்டமம்: அக். 10
அதிர்ஷ்ட நாள்: செப். 22, 26. அக். 4, 8, 13, 17
பரிகாரம்: மூகாம்பிகையை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்:  நிதானித்து செயல்பட வேண்டிய மாதம் புரட்டாசி. தனக்காரகன் குரு பகவான் உச்சமாக இருப்பதால் வியாபாரம் தொழிலில் போட்டி அதிகரிக்கும். பண வரவில் எதிர்பாராத தடை உண்டாகும். குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தொழில், பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். ஒரு பக்கம் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம்  நிம்மதியும் உண்டாகும். விரயம் கட்டுப்படும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.  சப்தமாதிபதி சூரியன் 8ல் சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்குள் சிறு சங்கடம் வந்து போகும். பழகிய நண்பர்களும் உங்கள் நிலையறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். உங்கள் சங்கடங்களுடன் அவர்கள் கொடுக்கும் சங்கடங்களும் உங்களைக் காயப்படுத்தும். சில நேரங்களில் அமைதி காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். அக். 9 வரை பாக்கியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் கையில் பணம் இருக்கும். உங்களை நம்பி இருப்போருக்கும், பக்க பலமாக இருப்பவர்களுக்கும் உதவிகள் செய்வீர்கள். விவசாயிகள் தங்களுடைய அவசர வேலைகளால் விளைச்சலைக் கவனிக்க முடியாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாணவர்களுக்கு செப்.23 முதல் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் பிரச்னை தேடி வரும். அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்துவதும், ஆசிரியர் ஆலோசனையை ஏற்பதும் நல்லது. 

சந்திராஷ்டமம்: அக்.11
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 26, 30. அக். 3, 8, 12, 17
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us