sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மகரம்

/

மகரம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

மாத ராசி பலன் : மகரம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மகரம்

மகரம்

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிதானமாக செயல்படும் உங்களுக்கு, புரட்டாசி யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகனான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து விலகி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். இனம் புரியாத பயம் இருக்கும். அச்ச உணர்வுடன் செயல்படுவீர்கள். அதனால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அக். 9 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அவதுாறு செய்தவர்கள் விலகிச் செல்வர். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். அக்.10 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்திற்கு வழியை உண்டாக்குவார். எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கும். உறவினர்களுக்கும் உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும். லாபாதிபதி செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் வரவு இருக்கும். மறுபக்கம் அதற்கேற்ப செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். அரசு பணியாளர்கள் முடிந்தவரை நிதானமாக செயல்படுவது நல்லது. சிறு வியாபாரிகள் புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ள வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உடல் நிலையில் கவனம் தேவை. 
சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16, 17.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 26, 28. அக். 1, 8, 10.
பரிகாரம் காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.

திருவோணம்
வாழ்க்கைப் பயணத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழும்  உங்களுக்கு புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். தன குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் சனி வக்ரம் அடைந்த நிலையில், அங்கு ராகு சஞ்சரித்தாலும் அக்.7 வரை குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.  தொழில் லாபம் தரும். புதிய முயற்சி வெற்றியாகும். விரயம் கட்டுப்படும். அக். 8 முதல் குரு அதிசாரமாக கடகத்தில் சஞ்சரிப்பதால் இந்நிலையில் மாற்றம் ஏற்படும். குருபார்வை ராசிக்கு கிடைப்பதால் நெருக்கடி சற்று விலக ஆரம்பிக்கும். அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக். 8 முதல் ராகுவிற்கு குரு பார்வை விலகுவதால் குடும்பத்தில் பிரச்னை வரலாம். பண விவகாரத்தில் கவனக்குறைவு ஏற்படும். நிதானமில்லாமல் பேசுவதால் சங்கடம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல் நிலையில் நெருக்கடி இருக்கும். முடிந்தளவு  நிதானமாக செயல்படுவது நல்லது. எந்த ஒன்றிலும் வேகமான செயல்பாடு இந்த மாதத்தில் வேண்டாம். அரசு பணியாளர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. பிறரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம். மேலதிகாரியின் அனுமதியுடன் செயல்படுவதால் நெருக்கடி விலகும். செப். 29 முதல் புதன் சஞ்சாரம் வருமானத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். கடந்த மாதத்தை விட இந்த மாதம்  அதிகபட்ச நன்மை தரும் மாதமாக இது இருக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 20. அக். 17.
அதிர்ஷ்ட நாள்: செப்.17, 26, 29. அக். 2, 8, 11.
பரிகாரம் வளர்பிறை நிலவை தரிசித்து வழிபட குழப்பம் தீரும்.

அவிட்டம் 1, 2 ம் பாதம்
கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, புரட்டாசி முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அக்.7 வரை அங்கு குரு பார்வை இருப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றி தரும். வேலைத் தேடுவோருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு  இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குறிப்பாக காவல்துறையினருக்கு நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அக். 8 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். செல்வாக்கு உயரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் குடும்பத்தில் குழப்பம், உடல் பாதிப்பு, எதிர்பாராத தடைகளை ஏற்படுத்துவர். ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது நல்லது. செப். 29 முதல் புதனும், அக். 10 முதல் சுக்கிரனும் அதிகபட்ச யோகத்தை தருவர். புதிய வாகனம், நகை, நவீன பொருட்கள் வந்து சேரும். மனதில் நிம்மதி உண்டாகும். வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கும். சாதகமான நிலை ஏற்படும். விவசாயம் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
சந்திராஷ்டமம்: செப். 21.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.
பரிகாரம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் தீரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us