மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மிதுனம்
17 செப் 2026
முந்தைய மாத ராசி பலன்
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரித்து உங்களை வேகப்படுத்துவார். செப். 20 முதல் தன குடும்ப வாக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்ப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத் தொல்லை உண்டாகும். உடல் நிலையும் மனநிலையும் ஒரு நேரம் இருப்பதுபோல் அடுத்த நேரம் இல்லாமல் போகும். பண வரவில் தடையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகும். செப். 23 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்வீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் தேடிவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பெண்கள் குடும்பத்தினரையும் வாழ்க்கைத்துணையையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்கள். உடல் நிலையிலும் அவ்வப்போது சங்கடங்கள் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது அவசியம். ஒரு சிலர் தங்கள் செயல்களின் காரணமாக மற்றவரின் விமர்சனத்திற்கும் அவப்பெயருக்கும் ஆளாக வேண்டிய நிலை வரும். முடிந்தவரை எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ப லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி நன்மை அளிக்கும் பிற்பகுதியில் ஆசிரியரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: செப். 21.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27, அக். 5, 9, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.
திருவாதிரை: உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவும் தெய்வஅருளும் கிடைக்கும். கேது பகவனால் தடைபட்ட வேலை முடியும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளையும் எடுத்து முடித்துக் காட்டுவீர். அக். 9 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். கையில் பணம் புரளும். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழில் வளர்ச்சி அடையும். எதிர்ப்பு போட்டி பகை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். சிலருக்கு அதிகாரியின் ஆதரவும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். குருபார்வையால் வேலையில்லாதவர்களுக்கு பணிநியமனத்திற்குரிய தகவல் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட வழக்கு பிரச்னை எல்லாம் முடியும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சூரியன் கேந்திர பலம் பெற்று சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு பதவி தேடி வரும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் அக்கறை தேவை. பெண்கள் தங்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: செப். 22.
அதிர்ஷ்ட நாள்: செப். 25, அக். 4, 5, 13, 14.
பரிகாரம்: தில்லை காளியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: செல்வாக்கு அந்தஸ்து கௌரவத்தோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். குருபகவான் உச்சமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைக்கவும் கொடுத்த வாக்கை காப்பாற்றவும் முடியும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு போட்டி பகை என்பதெல்லாம் மாறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். உங்கள் திறமையை உடன் இருப்பவர்கள் அறிவர். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதைக் கூடும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கணவருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்களும் பெரியோரின் ஆலோசனையால் மனம் மாறுவர். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். விளைச்சலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு கடந்த மாதம் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: செப். 23.
அதிர்ஷ்ட நாள். செப். 21, 30. அக். 3, 5, 12, 14.
பரிகாரம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட உங்கள் வேண்டுதல் பலிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.