தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/மிதுனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

மாத ராசி பலன் : மிதுனம்
16 ஜூலை 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்

வெற்றிக்குரிய வழிகளை பின்பற்றி முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். மாதத்தின் முற்பகுதியில் விரய ஸ்தானத்திலும், அதன்பின் ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கும் செவ்வாய் செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை ஏற்படுத்துவார். நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். ஞான மோட்சக்காரகன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிக்கும் சக்தி உண்டாகும் இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி, தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் சகாய ஸ்தனாதிபதி சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும், பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பதும் நன்மை தரும். அரசியல்வாதிகள் தலைமையின் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்படுவதால் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜூலை 28, 29.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.

பரிகாரம்: அக்னீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.

திருவாதிரை
உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதம். யோகக்காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். ராசிநாதன் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் இருந்த சுமை இறங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பம் தொழில் மேன்மை அடையும். சிலர் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். நேர்த்திக்கடனை செலுத்தி வருவீர்கள். அதனால் நிம்மதி ஏற்படும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குருபகவான் ஆக.9 வரை அஸ்தமனமாகி இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் வேண்டும். புதிய முயற்சியில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனால் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். செல்வாக்கோடு நடை போட முடியும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆத்ம காரகன் சூரியன், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானம் தேவை. வருமான விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும். உடன் இருப்போரின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். பணியாளர்கள் நேர்வழியில் செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாணவர்கள் தவறான நட்பை விட்டு விலகுவதால் படிப்பில் முன்னேற்றமடைய முடியும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 29, 30.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22, 23, 31. ஆக. 4, 5, 13, 14.

பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும்.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்

நாளை என்ன நடக்கும் என்பதை இன்றே கணக்கிட்டு செயல்படும் உங்களுக்கு, ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். தன புத்திரக்காரகன் குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உச்சமாக சஞ்சரித்தாலும் ஆக.9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் கடந்த மாதம் வழங்கியது போல் இந்த மாதத்தில் அவரால் யோக பலனை வழங்க முடியாது. திட்டமிடாமல் வேலைகளில் இறங்கி அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்பார்த்த வரவும் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். பத்தாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவானால் வேலையில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்காது. சிலர் வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்யும் நிலை உருவாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். பல வழியிலும் செலவு ஏற்படும். சிலர் கடனை அடைப்பதற்கு மறு இடத்தில் கடன் வாங்குவீர்கள். ஆக.9 முதல் மீண்டும் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் அதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் நிம்மதி உருவாகும். தொழிலில் ஆதாயம் கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். எடுத்த வேலைகள் எல்லாம் வெற்றியாகும் விவசாயிகள் இந்த மாதத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜூலை 30, 31
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 23. ஆக. 3, 5, 12, 14

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட சங்கடம் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us