மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மிதுனம்
13 ஜூன் 2026
முந்தைய மாத ராசி பலன்

மிதுனம்
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத் தொடக்கத்தில் உங்கள் லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்தாலும், ஜூன் 19 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் மந்தநிலை ஏற்படும். சிலருக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். வீண் அலைச்சலால் மனம் சோர்வடையும். ஜென்ம ராசிக்குள் ஆத்ம காரகனும் உங்கள் சகாய ஸ்தானாதிபதியுமான சூரியன் சஞ்சரிப்பதால், உடல் நிலையில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் சோர்ந்துபோகும் நேரங்களில் தைரியத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். வியாபாரிகளுக்கு நம்பிக்கையை அதிகரிப்பார். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குரிய வழிகளை உருவாக்குவார். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பெரியோரின் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்கள் தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜூலை 1.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் நடக்கும். சங்கடங்கள் விலகும்.
திருவாதிரை
உலகையும் மனிதர்களையும் புரிந்தும் தெரிந்தும் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். செய்துவரும் தொழில்மீது அக்கறை ஏற்படும். விஐபிகள் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். சிலர் வேண்டுதலுடன் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகள் சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடிகள் நீங்கும். வழக்கு விவகாரங்கள் முடிவிற்கு வரும். மெமோ, சஸ்பெண்ட் என்று சங்கடங்களை சந்தித்தவர்கள் அவற்றில் இருந்து வெளியில் வருவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும், ராசியாதிபதி புதன் வக்கிரம் அடைந்திருப்பதும், ராசிக்குள் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களைக் குழப்பத்திற்கு ஆளாக்கும். எந்த ஒரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாத அளவிற்கு அதில் தடைகள் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையும் ஒத்துழைக்காமல் போகும். ஜூன் 19 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் பலவகையிலும் செலவுகளை அதிகரிப்பார். சிலர் சொந்த இடம் வாங்கவும், வீடு கட்டவும் செலவு செய்வீர்கள். கையிருப்பு கரைய ஆரம்பிக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவீர்கள். எதிர்காலம், பிள்ளைகள் என்று உங்கள் கவனம் செல்லும். மற்றவர்களால் பாராட்டக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு கல்லூரியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நட்பு வட்டம் விரிவடையும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 2.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 23, ஜூலை 4, 5, 13, 14.
பரிகாரம்: துர்கையை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு முதன்மையாக இருந்து பிறருக்கு ஆலோசனைகள் வழங்கி வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஞானக்காரகன் குருபகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால், இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் யாவும் விலகும். போராட்டநிலை முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள், புதிய வாகனம் வீட்டிற்கு வரும். நோய் நொடி வம்பு வழக்கு என்றிருந்த நிலை இருந்த இடம் தெரியாமல் போகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். ஆரோக்கியம் சீராகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு குருப்பார்வை உண்டாவதால் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் விலகும். தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். மெமோ இடைநீக்கம் என்ற நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும். திறமைக்கும் தகுதிக்கும் மரியாதைக் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது, தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். உங்களைத் துணிச்சலுடன் நடைபோட வைப்பார். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உடல்நிலை சீராகும். மூத்த குடிமக்களுக்கு மரியாதை உயரும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். மாணவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 3.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை 5, 12, 14.
பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.