sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மகரம்

/

மகரம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

மாத ராசி பலன் : மகரம்
15 டிச 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மகரம்

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்..: அமைதியாக இருந்து நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் மார்கழி, கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் விரய ஸ்தானமான 12ம் இடத்தில் மறைவு பெறுவதால், செலவு அதிகரிக்கும். அவசர செலவுக்காகவும் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலை உருவாகும். அரசு வழி முயற்சிகள் இழுபறியாகும். அரசியல்வாதிகள் தலைமையின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். நீங்கள் நேர்மையாக செயல்பட்டாலும் உங்கள் எதிரிகள் உங்கள் மீது அவதுாறை ஏற்படுத்திக் கொண்டிருப்பர். எடுக்கும் வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். பணியாளர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். யாருடைய அழுத்தத்திற்கும் இந்த நேரத்தில் இடம் கொடுக்க வேண்டாம். சுயதொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாயும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்று லாபம் காண்பீர்கள். தாய்வழி உறவுகள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் நன்மையை அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள் முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 6, 7
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 19, 26, 28. ஜன. 1, 8, 10
பரிகாரம் சொக்கநாதரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடந்தேறும்.

திருவோணம்: நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். கடந்த மாதம் வரை எளிதாக நடந்த வேலைகளிலும் இப்போது நெருக்கடி உண்டாகும். உங்கள் ராசிநாதனும் உங்கள் குடும்பாதிபதியுமான சனி வக்கிர நிவர்த்தி அடைந்து தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினர் ஒத்துழைப்பர். அவசரத் தேவைக்கு சேமிப்பு கை கொடுக்கும் என்றாலும் வார்த்தையில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். புதிய முயற்சியில் இறங்கும் முன் அது பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வது நல்லது. விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவு பல வகையிலும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.  அரசு வழியிலும் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது அவசியம். உங்களால் முடித்திடக் கூடிய வேலைகளைத் தவிர வேறு எந்த வேலைகளிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். அடுத்தவரை நம்பி எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். சிலர் தங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாகவும் இருக்கும். நீண்டநாள் பிரச்னைகள் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். கேட்ட நேரத்தில் உங்களுக்கு உதவி புரிந்து வந்தவர்களும் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பர். பாக்கியாதிபதி புதன் டிச. 25 வரை உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்.  அதன் பிறகு ஒப்பந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒன்றிலும் கையெழுத்திடுவதற்கு முன் நன்கு படித்துப் பார்ப்பது நல்லது.  மாணவர்களுக்கும் இந்த நேரத்தில் படிப்பில் கவனம் குறையும். எதிர்காலத்தை நினைத்து தங்களை மாற்றிக் கொள்வது அவசியம். வெளியூர் பயணத்தின் போது நிதானம் தேவை. புதியவர்களிடம்  விலகி இருப்பது நல்லது.  உடல் நிலையில் கவனம் தேவை. பெண்கள் கணவர் மீதும், குடும்பத்தின் மீதும் அக்கறை கொள்வது நல்லது. 
சந்திராஷ்டமம்: ஜன. 7, 8
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 11
பரிகாரம் சிவசக்தியை வழிபட தடைகள் விலகும். வேண்டுதல் நிறைவேறும். 

அவிட்டம் 1, 2 ம் பாதம்:தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வரும்  உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் லாபாதிபதியும், சுகாதிபதியுமான செவ்வாய் விரய ஸ்தானத்தில் மறைவு பெறுவதால், ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது அவசியம்.  சிலருக்கு அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும் என்றாலும் அதற்குரிய ஆதாயம் கிடைக்காமல் போகும். புதிய முயற்சியில் இறங்கினால் அதுவும் இழுபறியாகும். இடம், வீடு, சொத்து சம்பந்தமாக ஏதேனும் பிரச்னை உருவெடுக்கும். பொன் பொருளை விற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். கணவன், மனைவிக்குள் சரியான புரிதல் இல்லாமல் போகும் என்றாலும், உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணம் வரும். அவசிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட நெருக்கடி, குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருப்பது அவசியம். அஷ்டம கேது உங்கள் இஷ்டத்திற்கு தடை போடுவார் என்பதால் இந்த நேரத்தில் நிதானம் காப்பது நன்மை தரும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றாலாம். ஆனாலும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். செய்து வரும் தொழில் மீதும், பார்த்து வரும் வேலையின் மீதும் கவனமாக இருப்பவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படாது. விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 8
அதிர்ஷ்ட நாள்: 17, 18, 26, 27. ஜன. 9.
பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us