தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/கும்பம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

மாத ராசி பலன் : கும்பம்
16 அக் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கும்பம்

கும்பம் .. அவிட்டம் 3, 4 ம் பாதம்: எந்த ஒன்றிலும் கவனமாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரமக்காரகன் செவ்வாய், சத்துரு ஜெய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருந்தாலும், உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் தீரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கடந்த மாதத்தில் உத்தியோகம், தொழில், குடும்பம், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதையல் கிடைத்ததுபோல் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தவறான நட்புகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் முதலீட்டிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். உங்கள் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்தாலும் எதிர்பார்த்த பணம் வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வயதானவர்கள் ஆபத்து கட்டத்தில் இருந்து மீண்டு வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.

சந்திராஷ்டமம்: நவ. 5
அதிர்ஷ்ட நாள்: அக். 18, 26, 27. நவ. 8, 9.

பரிகாரம்: அனுமனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். போராட்ட நிலை மாறும்.

சதயம்: செல்வாக்கு அந்தஸ்து என்ற இடத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது நவ. 13 முதல் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். மனதில் இருந்த குழப்பம் பயம் விலகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் லாபம் காணக்கூடிய நிலை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் ஆசைகளை அதிகரித்து சிலரை தவறான வழியில் அழைத்துச்சென்ற ராகுவும் நவ. 13 முதல் விரய ஸ்தானத்திற்கு செல்வதால் ஆடம்பர செலவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும், ஆசைகளைப் பூர்த்தி செய்யவும் தாராளமாக செலவுகள் செய்வீர்கள். அதற்கேற்ற வருவாயும் வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.

சந்திராஷ்டமம்: நவ. 6.
அதிர்ஷ்ட நாள்: அக். 22, 26. நவ. 4, 8, 13.

பரிகாரம்: மடப்புரம் பத்திரகாளியம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். குருபகவான் அக். 20 முதல் அதிசாரமாக சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பும் பதவியும் தேடிவரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். முடங்கிக்கிடந்த தொழில் மீண்டும் இயங்குவதுடன் லாபம் தரத்தொடங்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். எடுத்த வேலையை முடித்து அதில் ஆதாயம் காண முடியும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சகோதர வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும் என்றாலும், அனைத்திலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் போகும். துணிச்சலுடன் செயல்படுவதற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: நவ. 7.
அதிர்ஷ்ட நாள்: அக். 21, 26, 30. நவ. 3, 8, 12.

பரிகாரம்: திருவெள்ளியங்குடி ஸ்ரீகோலவில்லி ராமரை வழிபட தடைகள் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us