மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கும்பம்
13 ஜூன் 2026
முந்தைய மாத ராசி பலன்

கும்பம்
கும்பம்
அவிட்டம் 3, 4 ம் பாதம்
உழைப்பதற்கு தயங்காத உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூன் 19 வரை செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் முயற்சிகளை வெற்றி ஆக்கினாலும், அதன்பின் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை சிலருக்கு உருவாகும். உடல் நிலையிலும் எதிர்பாராத பாதிப்புகள் தோன்றும். நம்பிக்கொண்டிருந்த வருமானங்கள் தள்ளிப் போகும். தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். வெளியில் என்னதான் செல்வாக்கோடு இருந்தாலும் வீட்டிற்கு வரும்போது உங்கள் மனநிலை பாதிக்கும். நண்பர்களும் உங்களுக்கு எதிராக இருப்பர். புதிய நபர்களால் சில சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். சிலர்மீது தவறான விமர்சனங்களும் எழும். ஒரு சிலர் உங்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்புவர் என்பதால் இந்த நேரத்தில் முடிந்தவரை ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் வார்த்தைகளை ஏற்பது அவசியம். சுயதொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்தமாக இருப்பதால் சங்கடங்கள் நேராமல் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற கவலை மேலோங்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் வந்து போகும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 22.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.
பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சதயம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மாதம் முழுவதும் உங்கள் சுகாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் மனதில் ஏதாகிலும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உடல்நிலையிலும் அவ்வப்போது சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாலினர் நட்பால் சிலருக்கு அவப்பெயரும் ஏற்படும் என்பதால் தங்கள் தகுதியை நினைத்து ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நன்மையாகும். குரு பகவான் சஞ்சாரமும் சாதகமாக இல்லை என்பதால் எதிர்ப்பு அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். சிலருக்கு வம்பு வழக்கு என்ற நிலை ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகள் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்திற்கும் விரய ஸ்தானமான 12 ம் இடத்திற்கும் கிடைப்பதுடன், 2 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவானுக்கும் கிடைப்பதால் ஏழரைச்சனியின் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். விரயச்செலவுகள் கட்டுப்படும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியத்திலும், சுயத்திலும் பெண்கள் கவனமாக இருப்பது நன்மையாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். கணவன் மனைவிக்குள் இணக்கமற்ற நிலை இருக்கும். புதிய நபர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் முடிந்தவரை கவனமாக செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 22, 23.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 26. ஜூலை 4, 8, 13.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
சிந்தித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். நண்பர்களும் பகைவராக மாறக்கூடிய நிலை உருவாகும். உடல்நிலையும் ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். எடுத்த வேலைகள் இழுபறியாகும் என்றாலும், குருப்பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கை உண்டாக்கும். ஏழரைச்சனியின் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். உங்கள் செல்வாக்கு கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படக்கூடிய நிலை உருவாகும். ஒரு சிலர் உங்களுக்கு எதிராக அவதூறும் பரப்புவர். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர் என்பதால் முடிந்தவரை அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையாகும். புதிய இடம் வீடு வாங்கும் போது சட்ட சிக்கல்களை அறிந்து செயல்படுவது அவசியம். களத்திரக்காரகன் சுக்கிரன் ஜூன் 6 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். பெண்களுக்கு வேலையில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும் என்பதுடன் உடல்நிலையின் காரணமாக அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியதாகவும் இருக்கும். சிலருக்கு தவறானவர்களின் வழிகாட்டுதலால் குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசித்து செயல்படுவது நன்மையாகும். ராகு, கேது, சூரியன், செவ்வாய், சுக்கிரன் என்று பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு எதிர்மறையாக சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் எச்சரிக்கை அவசியம். விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள்ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 23.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30. ஜூலை 3, 8, 12.
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.