மாத ராசி பலன்
மாத ராசி பலன் : கும்பம்
16 ஜூலை 2026
முந்தைய மாத ராசி பலன்

கும்பம்
கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்
உழைப்பையும் முயற்சியையும் மூலதனமாகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் ரத்தக் காரகன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை பளு கூடும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தம் மேலோங்கும். திடீரென சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். உடன் இருப்பவர்களுடன் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். சிலருக்கு உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றி விலகும். ஆக. 2 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் செவ்வாயால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்திலும் ஒற்றுமை என்பது இல்லாமல் போகும் என்றாலும், ஆக. 1 முதல் புதன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். நெருக்கடியை ஏற்படுத்தி வந்த கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். சப்தம ஸ்தானத்தில் ஆக. 1 வரை சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது நன்மையை உண்டாக்கும். குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி நன்மையாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 19. ஆக. 15.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 9, 17.
பரிகாரம்: வீரராகவ பெருமாளை வழிபட உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.
சதயம்
லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் பெரிய அளவில் திட்டமிடுவீர்கள் என்றாலும், உங்கள் உழைப்பிற்கேற்ற ஆதாயமே கிடைக்கும். நண்பர்களாக நினைத்துப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். இந்த நேரத்தில் ராசிநாதன் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் ஏழரைச்சனியின் பாதிப்பு விலகும். ஆரோக்யம் மேம்படும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். மனதில் இருந்த பயம் போகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் எதிர்ப்பு நோய் நொடி பிரச்னை வம்பு வழக்கு என்பதெல்லாம் இல்லாமல் இருக்கும். ஆத்ம காரகன் சூரியன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடித்திடக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் முடிந்தவரை எதிர்ப்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். கௌரவத்தை ஏற்படுத்தும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனை இல்லாமல் எந்த வேலயிலும் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடமும் கொஞ்சம் விலகியே இருப்பது நன்மையாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20. ஆக. 16.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 22, 26, 31. ஆக. 4, 8, 13, 17.
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
நாளை என்ன நடக்கும் என்பதை இன்றே உணர்ந்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக்காரகன் குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் செயல்களில் தடுமாற்றம் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனம் தடைபடும். யோசிக்காமல் சில வேலைகளை எடுத்து அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். களத்திரக்காரகன் சுக்கிரன் ஆக. 1 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலமும் சபலமும் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதுடன் இந்த நேரத்தில் உங்கள் செல்வாக்கு அந்தஸ்தில் குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் முடிந்தவரை எதிர்பாலினரை விட்டு ஒதுங்கி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். புதியதாக அறிமுகம் ஆகும் யார்மீதும் இந்த நேரத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் நிலையினையும் வேலைகளையும் குடும்பத்தினரிடம் கூறி ஆலோசனைபெற்று அதன்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் சங்கடங்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும். மாதம் முழுவதும் ஆத்ம காரகன் சூரியனும், மாதத்தின் பிற்பகுதியில் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். விவசாயிகள் காலநிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 20, 21. ஆக. 17.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 26, 30. ஆக. 3, 8,12.
பரிகாரம்: முன்னோரை வழிபட நன்மைகள் நடக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.