மாத ராசி பலன்
மாத ராசி பலன் : துலாம்
16 செப் 2025
முந்தய மாத ராசி பலன்

துலாம்
துலாம்
சித்திரை 3, 4 ம் பாதம்
நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருந்து வரும் உங்களுக்கு புரட்டாசி நன்மையான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களில் வேகத்தை ஏற்படுத்தலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என சில முடிவுகளை மேற்கொள்ள வைக்கலாம். அதன் காரணமாக பொருளாதாரத்தில் நெருக்கடியும், தொழிலில் பிரச்னைகளும் உண்டாகும். ஞான மோட்சக்காரகன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் வந்து கொண்டிருக்கும். நடக்க வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கும். முயற்சிகளில் தவறு ஏற்பட்டாலும் அவற்றை மாற்றம் செய்யக்கூடிய நிலை ஏற்படும். அக். 7 வரை பாக்ய குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றி பெறும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவியாக இருப்பர். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாதம் முழுவதும் ராசியாதிபதி சாதகமாக இருப்பதால் மனதில் நிம்மதியும், எடுத்த வேலைகளில் லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்தை விற்க முடியும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் அக். 8 முதல் கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: அக். 10.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.
பரிகாரம் சிவபெருமானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சுவாதி
நியாயம் நேர்மை மிக்க உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். 5 ல் சஞ்சரித்து வரும் ராகுவிற்கு அக். 7 வரை குருபார்வை இருப்பதால் எதிர்வரும் பிரச்னைகள், சங்கடங்கள், சிக்கல்கள் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள முடியும். அக். 8 முதல் குரு பார்வை 5 ம் இடத்தை விட்டும், ராசியை விட்டும் விலகுவதால் செயல்களில் தடை, தாமதம், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். சிலருக்கு பிள்ளைகளால் நெருக்கடி, பூர்வீக சொத்தில் பிரச்னையை சந்திக்க நேரிடும். உங்கள் லாபாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சந்திப்பதால் செலவுகள் பல வழியிலும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் அக்.8 முதல் உங்கள் செயல்களில் வேகத்தை ஏற்படுத்துவார். அவசர முடிவுகளை மேற்கொள்ள வைப்பார். அதனால் சங்கடத்திற்கு ஆளாகலாம். ராசிநாதன் தேவையான வருமானத்தை வழங்குவதோடு நிம்மதியை உருவாக்குவார். குருவின் பார்வையும் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும். வழக்குகளில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். செப். 29 முதல் பாக்கியாதிபதி புதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் திடீர் பயணம் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம். அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப செயல்படுவதால் நேரடியான பாதிப்பு இல்லாமல் போகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
சந்திராஷ்டமம்: அக். 10, 11.
அதிர்ஷ்ட நாள்: செப். 22, 24. அக். 4, 6, 13, 15.
பரிகாரம் விஷ்ணு துர்கையை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்
புத்தி சாதுரியமும், பிறரின் பார்வைக்கு நல்லவராகவும், நேர்மையானவராகவும் வாழும் உங்களுக்கு புரட்டாசி நன்மையான மாதம். அக். 7 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு அதிகரிக்கும், பெரியோரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும், நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்த முடியும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த பூர்விக சொத்து விவகாரம் சாதகமாகும். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். அக். 8 முதல் அதிசாரமாக ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் பார்த்து வரும் வேலையில் நெருக்கடி ஏற்படும். இந்த மாதம் முழுவதும் ராஜ கிரகமான சூரியனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. அக்.8 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயும், 5ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவும் எல்லா வகையிலும் சோதனைகளை உண்டாக்குவர். குடும்பத்தில் ஒரு நிமிடம் இருந்தது போல் அடுத்த நிமிடம் நிம்மதி இல்லாமல் போகும். உறவுகளுக்குள் இருந்த இணக்கமான நிலையில் விரிசல் ஏற்படும். குருவின் பார்வைகள் உங்களை ஓரளவிற்கு பாதுகாக்கும். தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். எந்த பாதிப்பு வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழும் நிலை இருக்கும். வியாபாரத்தில், தொழிலில் உண்டான போட்டி விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். பொருளாதார நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். விவசாயிகள் விளைச்சலில் கவனமாகவும், வியாபாரிகள் புதிய முதலீட்டில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: அக். 11, 12.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30. அக். 3, 6, 15.
பரிகாரம் நின்ற நாராயணப் பெருமாளை வழிபட நினைத்தது நடந்தேறும்.