sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

சிம்மம்

/

சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்
15 ஏப் 2022

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் அகலும். பணம் பலவழிகளிலும் வரும். காரியதாமதம் நீங்கும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப்பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.  குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மனம் மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. நண்பர்களுடன் வீண் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வர கடன் தொல்லை  பறந்தோடும்.

பூரம்: எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட துாரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மை ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களைத் தீட்டுவர்.  அரசியல்துறையினருக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: தினமும் பஞ்சமுக தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்:  எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். சிலர் குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவர். கலைத்துறையினருக்கு செயல்திறன் வெளிப்படும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சக கலைஞர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும். முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை பல வழிகளில் வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.
பரிகாரம்: காமாட்சி அம்மனை வணங்க எல்லாம் நன்மையாக முடியும். .

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us