sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

மகரம்

/

மகரம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : மகரம்
16 நவ 2012 to 16 ஜூன் 2014

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மகரம்

அன்பான உள்ளத்தால் சமூகத்தில் நன்மதிப்பு பெறும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பத்தில் ராகுவும், நான்கில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சுபவிரயம், அஷ்டம ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே விவகாரம், வாக்கு ஸ்தானத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சியில் இரு கிரகங்களும் அனுகூல பலன் தரும் வகையில் இல்லை. இருப்பினும் ராகு-கேதுவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாகவும், பிற கிரகங்களின் ஆதரவு காரணமாகவும் சில நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவைவிட செலவு அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகள் அன்புடன் நடந்து கொள்வர். சொத்தின் பேரில் கடன் பெறுகிற கிரகநிலை உள்ளது. நம்பகமானவர்களிடம் கொடுத்து  பணம்பெறுவதால் வில்லங்கம் வராமல் தவிர்க்கலாம். இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும். புத்திரர்கள் தமது செயல்களை நல்லவிதமாக அமைத்துக்கொள்வர். படிப்பு, தரதேர்ச்சியில் திட்டமிட்ட இலக்கை எளிதாக அடைவர்.உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகளை விட்டு விலகி விடுங்கள். வெளியூர் பயணங்களை பயன் கருதி மேற்கொள்வதால் செலவைத் தவிர்க்கலாம். தம்பதியருக்கிடையே சிறு சச்சரவுகள் வரலாம். நண்பர்களின் கருத்துக்களில் இருக்கிற நியாயங்களை ஏற்க மறுக்காதீர்கள்.

தொழிலதிபர்கள்: கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுவதால் உற்பத்தியில் உள்ள சுணக்க நிலை மாறும். புதிய ஒப்பந்தங்களை உருவாக்க கடந்த காலங்களில் நட்பு கொண்ட சிலர் உதவுவர். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது நல்லது. அரசு தொடர்பான உதவி சிறிது கால அவகாசத்தில் கிடைக்கும்.

வியாபாரிகள்: விற்பனை இலக்கை அடைய அக்கறையுடன் செயல் படுவர். அளவான லாபம் வைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சரக்கு, பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ரொக்கத்திற்கு விற்பதால் தேவையற்ற கடன் வராமல் தவிர்க்கலாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள், பணியில் சில குளறுபடிகளை எதிர் கொள்வர். தயக்கமும், நம்பிக்கை குறைவும் பணி நிறைவேற்றுவ தில் தாமதம் உருவாக்கும். நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கும் வகையில், பணியில் கவனமாக இருக்க வேண்டும். செலவில் சிக்கனம் நல்லது. எவருக்கும் தகுதிக்கு மீறிய பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. சலுகைகள் கேட்பதில் நிதான அணுகுமுறை நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உடல்நலத்தை சரிவர பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். சலுகைகள் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். குடும்பப் பெண்கள், வரவுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவதால் தேவையற்ற கடன்களைத் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்கள் தேவையான உதவிபுரிவர். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பால் மட்டுமே உற்பத்தி, விற்பனையை சீராக்க முடியும். பணவரவு சுமார்.

மாணவர்கள்: கவனமாகப் படிப்பதால் மட்டுமே எதிர்பார்க்கும் தேர்ச்சி கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர வெளிவட்டார நிகழ்வுகள் பற்றி பேசுவதால் மனவருத்தம் வரலாம். கவனம். விளையாட்டுத்துறை சார்ந்த மாணவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசியல்வாதிகள்: அரசு தொடர்புடைய பணிகள் நிறைவேறுவதில் புதுவித குறுக்கீடுகளை சிலர் உருவாக்குவர். பொறுமையும் சமயோசிதமும் பின்பற்றுவதால் சில நற்பலன் கிடைக்கும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பாதுகாத்திட கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். புத்திரர்களின் உதவி ஓரளவுக்கு உண்டு.

விவசாயிகள்: சுமாரான மகசூல், பயிருக்கு குறைந்த விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் இதே நிலையே. நிலம் தொடர்பான விவகாரங்களில் கனிவுடன் நடந்து கொள்ளவும்.

பரிகாரப் பாடல்:
ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றி பணிந்திடுவோமே.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் இடையூறு வராத நல்வாழ்வு ஏற்படும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us